Tuesday, 22 July 2008

என்ன எழுதுவது...


பிளாக் எழுத ஆரம்பித்தாயிற்றூ..... என்னத்த எழுதறதுனு ஒன்னுமே புரியலைபா... சரி எல்லோரும் சொல்வது போல பிள்ளையாரை கும்பிட்டு விட்டு .....என்றூ நினைக்கும் போது.... வழக்கம் போல தலைவர் நினைப்பு.
நல்லது/ கெட்டது எதுவானாலும் ரஜினி நினைப்பில்லாமல் செய்ய முடியவில்லை.
ரஜினியின் படங்களூக்கு மட்டும் ரசிகனாயிருந்த நான்..... ரஜினி என்ற மனிதனுக்கும் ரசிகனானது 1997 மே மாதம் 12ஆம் தேதி.
பெங்களூரில் வேலை பார்த்த சமயம்; ஒரு இரவு ஹோட்டலில் ஒரு பரபரப்பு; நண்பன் ஒருவன் ;டேய்... உன் ஆளூ ரெஸ்ட்டாரெண்ட்ல என்றான்..... ஃபிகர் இல்லைங்கோ.... சாட்சாட் ரஜினியேதான்.
எப்படியாவது போய் ஒரு முறை போய்ப் பார்த்துவிட வேண்டும் என்றூ கங்கணம் கட்டியாயிற்றூ.
தலைவர் சாப்பிட்ட பின்னர்..... அருகே சென்றேன்.... கிட்டப் போய்ய்ய்ய்.......ரொம்ப கிட்ட்ட்ட்ட்ட்ட போய் நின்ற போது; கால்கள் தரையில் இல்லை (ரஜினி ரசிகனால் மட்டும் தான் இதை உணர முடியும்)
இனிதான் டமாஸ் இருக்கு

நான் : ஹ்ஹ்ஹ்.... ஹலோ சார்.
ரஜினி : ஹலோ (புன் சிரிப்பு)
நான்: ஈஈஈஈஈஈஈஈஈஈ.. ( வெறூம் இளிப்பு)
ரஜினி : யெஸ்?
நான் : மீண்டும் அதே ஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ரஜினி : (மனதிற்குள்) சரிதான்...
நான் : அடுத்த படம் என்ன சார்?
ரஜினி : (தாடியைத் தடவியபடி) இன்னும் முடிவாகலைப்பா...
நான் : (மீண்டும்) அதே ஈஈஈஈஈஈ
நான் : மியூசிக் இளையராஜாவா சார்??
ரஜினி : இன்னும் படத்த பத்தி எதுவும் யோசிக்கலைப்பா (சிரிப்பு)
நான்: .......... (மனதிற்குள்) ஏதாவது சீக்கிரம் பேசு....
நான் : சார் அருணாச்சலம் பார்த்தேன் சார்... படம் நல்லா இருந்தாலும்; பாட்ஷா மாதிரி இல்ல சார் ......அடுத்த படம் பாட்ஷா போல இருக்கனும்
என்றூ சொல்லி முடித்த அந்த நொடியில் மனசாட்ச்சி டேய்ய்ய்ய் பாவி... ஏழு தடவ பாத்தீயேடா.... இதுல அருணாச்சலம் ஏழு எழுத்து; அதனால் ஏழு தடவ பாத்தேன் என்றூ அலப்பரை வேற.... இப்போ படம் சரியில்லைனு... அதுவும் ரஜினி கிட்டேயே சொல்ற..
இவ்வாறூ பதறீயவாறே... ரஜினியைப் பார்க்கிறேன்.....

ரஜினியிடமிருந்து ஒரு புன்னகை ; மென்மையாக தலையை ஆட்டியபடி...
கண்டிப்பா செய்யலாம். அவ்வுளவுதான்
அதற்க்கு மேல் நின்றால்; மேலும் ஏதாவது ஊறீக் கொட்டுவேன் என்பதால்... ஜூட்.ஆச்சர்யப்பட வைத்த விஷயம் என்னவென்றால்; சிறிது கூட முகம் சுளீக்காது, கோபப்படாது..... ஒரு ரசிகனின் கருத்தை கவனமாக கேட்டு புன்னகைத்த அந்த மனிதன்... சராசரி நடிகன் அல்ல.
ரஜினியின் எளிமையைப் பற்றீ ஒவ்வொரு முறை படிக்கும் போது இந்த நிகழ்ச்சி மனதில் வந்து போகும்.

8 comments:

Deepika said...

செறி நீ சொன்ன நாலு வேட்டில நான் ஒண்ணுனு முடிவாயிடுத்து
தலைவர் பாத்த விழையம் இது வரைக்கும் என்னகு தெரியவே தெரியாது
ரஜினி நெனசுருபார் வந்துட்டன் வெட்டி பயன் :)
anyway சுத்த தமிழ்'எ கொறைச்சு லோக்கல்'எ எழுதின என்ன மாறி ஆளுக்கு படிக்கறது சுலபம்

Raja said...

அழகா சொன்னிங்க. நிறைய ரசிகர்கள் ரஜினி என்ற மனிதனுக்கு தான் ரசிகன்.
இது தான் ரஜினியின் தனித்தன்மை

Vijay said...

அது வேட்டி இல்ல தீபிகா... வெட்டி. தலைவர் கண்டிப்பாக அப்படி நினைத்து இருக்க மாட்டார்... May be... இதோ அடுத்த கேசு.
கண்டிப்பா கொலோக்கியலா எழுத முயற்ச்சிக்கிறேன்.

Vijay said...

ராஜா நீங்க சொல்றது சரிதான்.... ஆனால் நம்மில் பலபேர்... இந்த உண்மையை உணரவில்லை.
பதிவிற்க்கு நன்றி.

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................... இதுக்கு இப்படி நீங்க பில்ட் அப் கொடுக்கறது ஓவரு. நான் நீங்க பயங்கரமா பேசிட்டீங்களோன்னு நினைச்சேன். அதேப் போல முக்கிய விஷயத்த சொல்லாம விட்டுட்டீங்களே, அவர் என்னல்லாம் சாப்டாரு, என்ன ட்ரஸ் போட்டிருந்தாரு, இதெல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு ரொம்ப முக்கியமான விஷயம்ங்க

கிரி said...

விஜய் உங்க பதிவை rajinifans.com ல் பார்த்தேன்.

கலக்குங்க

Vijay said...

rapp என்ன இது சின்னப்புள்ளையாட்டம்??? சைனீஸ் மெனு, கருப்பு (அ) கருநீலம் குர்த்தா, வெள்ளை பைஜாமா. சிங்கம் தனியாதான் உணவருந்தியது.
அட... இப்பவாச்சும் கண்ணைத் துடைங்க ;)

Vaanathin Keezhe... said...

அவரைப் வந்தாலே பலருக்கு தூக்கம் போயிடும்...

ரசிகனா இருந்தாலும் சரி... எதிரியா இருந்தாலும் சரி. அதான் தலைவரோட பவர்!

-என்வழி