Thursday, 31 July 2008

குசேலனும் மன்னிப்பும்


குசேலன் படம் ரீலிஸாகும் போது இது தேவையா? என்று சில பேரும்.
ரஜினியின் முகத்திரை கிழிந்துவிட்டது என்று சிலரும்
ரஜினி தனது லாபத்திற்க்காக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டார் என பலரும் கலந்து கட்டி அடித்து வரும் வேளையில்.... குசேலனைப் பார்த்தேன்.
பல வருடங்களுக்கு பிறகு அலட்டல் இல்லாத ரஜினி படம். முக்கியமான விஷயம் பசுபதி கதாநாயகனாக நடித்துள்ள குசேலன் படத்தில் ரஜினியும் நடித்திருக்கும் படம். கண்டிப்பாக பெண்கள் கூட்டம் அலை மோதும். க்ளைமேக்ஸ் காட்சியில் ரஜினியின் நடிப்பு மிக அருமையான மிகைப்படுத்தப்படாத ஒன்று!!
சரி இப்போ மன்னிப்பு மேட்டருக்கு வருவோம்.....

அது ஏங்க ரஜினிய மட்டும் எல்லோரும் நோண்டிக்கிட்டே இருக்கானுவ??
உடனே ரஜினி தமிழ் மக்களை சுரண்டி சாப்பிடறார், ஒரு துளி வியர்பவைக்கு ஒரு பவுன் தங்க காசு என்றெல்லாம் சொல்லி ஏமாத்துறார்னு சொல்ல வேண்டாம். கலைஞரும், அம்மாவும், அய்யாவும் பேசாத பேச்சா (அ) அடிக்காத பல்டியா?
ரொம்ப சின்ன விஷயம்...
அவர் உதைக்கனும்னு சொன்னது தப்பே கிடையாது; தெளிவா சொன்னாரே பொதுமக்களுக்கு தொந்திரவு தருபவர்களைத்தான் உதைக்கனும்.

இப்போ அவர் பெரிசா மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை

/தவறின் மூலம் பாடம் கற்றுக் கொண்டுவிட்டேன்.... அதுக்கு என்ன அர்த்தம்??? /

அந்த உண்ணாவிரதத்திற்குப் பிறகு வச்சாரு பாரு நம்ம கலைஞர் சார் ஒரு பெரிய ஆப்பு. அது ஒரு பாடம்.

குசேலன் பிரச்சினையின் போதோ, பாபா ரிலீஸ் சமயத்திலோ தமிழ் சினிமா உலகம் எல்லாதையும் மூடிக்கிட்டு இருப்பது. இது ஒரு பாடம்.

இது போன்ற நேரத்தில் தமிழ் பாதுகாவலர்கள் நேரம் பாத்து ஒரு ஆட்டம் ஆடுவார்களே ... அதுவும் ஒரு பாடம்.

இது போன்ற சில்லரைத்தனமான வேலைகளில் நமது கவனம் திசை மாறும்..ஒகனேக்கல் விஷயம் முற்றிலும் மறக்கப்பட்டு விடும். இது நமக்கு ஒரு பாடம்.

ஒருத்தன் பேரோ, புகழோ, பணமோ சம்பாதிச்சா அவனவனுக்கு அங்கங்கே எரியுதோ???

முடிவாக.. ரஜினி மன்னிப்புக் கேட்டதால்(கேட்டாரா?) அவரின் தமிழ் பற்று மீண்டும் கேள்விக்குரியதாகப் போகிறது???... வெங்காயம்.

4 comments:

பாசக்கார பயபுள்ள... said...

innumapa avana nambureenga..


மானமுள்ள தமிழர் யாவரும் இந்த குசேலன் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணியுங்கள்!.

Vijay said...

என்ன பாசக்கார புள்ள... மானமுள்ள தமிழர் எல்லோரும் கலைஞர் சார் அவர்களையும் புறக்கணிக்கலாமா?? போராட்டம் முடிந்தவுடன்... ஒகனேக்கல் மேட்டர ஊத்தி மூடியவராச்சே... ரஜினி என்ற நடிகன், தனது படங்கள் வெற்றியடைய செய்யும் ஜிகினா வேலைக்ளையும் அதை கண்டு எரிச்சல் அடையும் கூட்டத்தையும் கண்டு என்ன் சொல்வது என் புரியவிலை.

rapp said...

அவர் ஹோக்கேனேக்கல் பிரச்சினை ஆரம்பிச்சவுடன் ஒழுங்கா பாரின் ட்ரிப் போயிருந்தா இந்தப் பிரச்சினை வந்திருக்காதில்லை. சரி, அப்பவும் உயிர்வாங்கி இருப்பாங்கன்னா, பேசாம ஏதாவது ஆஸ்பத்திரியில படுத்துக்கிட்டு சீன் போட்டிருக்கலாம் இல்லையா. இப்போ பாருங்க பிரச்சினைய!!!!

Vijay said...

என்ன செய்ய rapp... அவரு கழகத்தில் இல்லையே! இருந்த்திருந்தா இதெல்லாம் செய்திருப்பார் இல்லாங்காட்டி அய்யோ தண்ணி தராம கொல்றாங்களேனு சீனாவது போட்டிருப்பார்