Thursday, 24 July 2008

மலரும் ரஜினி நினைவுகள்


தலைவரைப் பத்தி எழுதாம வேற மேட்டர் போடலாம்னா.... இந்த தட்டச்சு பலகை ஒத்துழைக்க மாட்டேங்குதே....
சரி... இப்போ என்ன மொக்கைய போடறேன்னுப் பார்ப்போம்.
சில பல நினைவலைகள்...
(வருஷம் கொஞசம் முன்னே பின்னே இருக்கலாம்....)
1)தங்க மகன் - மதுரை சுந்தரம் தியேட்டரில் 83/ 84 தீவாளிக்குப் பார்த்தது.... காமெடி என்னன்னா..... அன்னிக்குதான் நமக்கு கண் பரிசோதனை வேற... பாத்தீங்களா சோதனைய.... (நானெல்லாம் அப்பவே கண்ணாடி பார்ட்டியாக்கும்) சாயந்திரம் கண் டெஸ்ட்...... நைட் ஷோ சினிமா. அழுது புரண்டு, மூக்கு சிந்தி ஒரு வழியா டவுசர இழுத்துகிட்டு படத்தை பார்த்தேன்
(அன்னிக்கு போட்ட கண்ணாடி... இன்னிக்கு வரைக்கும் மாறவேயில்லை; இத தலைவர் படையப்பா விழாவில் அவரோட பைஜாமா பத்தி பேஸ்ன ஸ்டைலில் படிங்க)

2) முரட்டுக்காளை - இந்த படம் புதூரில் பார்த்த மாதிரி ஒரு நியாபகம்... புதூர் ப்ஸ்ஸ்டாண்டில் நின்று ரகளை செய்து பார்த்த படம். (அந்த சைக்கிள் கடை இன்னும் இருக்கா? சாம்பியன் என்று பெயர்)

3)கொடி பறக்குது - இது செம காமெடிங்கோ.... சபரி மலைக்கு மாலை போட்டிருந்த நேரம். சினிமா கண்டிப்பா பார்க்க தடை.... ஆனாலும் ரஜினி சாமிக்காக ஜயப்ப சாமியிடம் ஸ்பெஷல் அனுமதி வாங்கிட்டு போய்ப் பார்த்த படம்.... ஜயப்ப சாமி மன்னிக்கவில்லை. தண்டணை படம் பார்க்கும் போதே கிடைச்சுருச்சு. ( தலைவர் படம் மொக்கைனு நாங்க ஒத்துக்கவே மாட்டோம்)

4)அதிசய பிறவி - மதுரை அம்பிகா தியேட்டரில் பார்த்தது.... சரி சரி அடுத்த படதுக்கு போலாம்

5) அண்ணாமலை - இது படம். ஸ்கூல் தோஸ்த் ஷாஜினு ஒருத்தன்.அம்பிகா தியேட்டர் வாசல்ல பராக்கு பாத்துகிட்டு நிக்கிறோம். செம கூட்டம். ப்ளாக்ல டிக்கெட் கன்னா பின்னானு ஓடுது. ஒரு புண்ணியவான் கம்மி ரேட்ல டிக்கெட் கொடுத்தாரு. அவரை வாழ்த்திவிட்டு உள்ளே ஓட்டமா ஓடுறோம்..... இருட்டுல திட்டு வாங்கி சீட்ல உக்காந்தா.... தலைவர் பத்திரத்துல ரொம்ப வேகமா கைநாட்டு வைச்சுகிட்டு இருந்தாருப்பா... இடைவேளை. செம காண்டாயிடிச்சு.
அப்புறம் படத்த ஒரு 20 த்டவை பாத்தாச்சுங்க. இது வரலற்றுக் குறிப்பு.

6) நாட்டுக்கொரு நல்லவன்- அதே அம்பிகா தியேட்டர். அதே எஃபெக்ட் ... அதாவது அடுத்த படம். எஸ்கேப்.

7)பாட்ஷா- கொடைக்கானலில் வேலைப் பர்த்த சமயம். லீவில் அதே அம்பிகா தியேட்டர். படம் பார்த்த ஒவ்வொரு நொடியும் தலைவர் ரசிகனால் மறக்க முடியாது. இன்றும் ரஜினி ரசிகனால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம்.

8)முத்து - முதல் நாள் (தீவாளி ??) அன்று டிக்கெட் கிடைக்காமல், குருதிப்புனல் பார்த்து விட்டு; அடுத்த நாள் சென்று சுகப்ரியா/ மினிப்ப்ரியாவில் பார்த்த படம். செம ஜாலி ராக்கெட் ( குறிப்பாக மீனாவுடன் மேடையில் வரும் காட்சியும் & வண்டியில் வரும் நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துகிட்டு இருக்கேன்;ஏன் என்னை வம்புக்கு இழுக்குறீங்க... சும்மா ஜெ. ஜெ னு இருக்கும்... இது எப்படியிருக்கு?

9)அருணாச்சலம் - பெங்களுரில் லாவண்யாவில் பார்த்தது... முதல் ஷோ; பின்னர் மீண்டும் லாவண்யாவில் ஒரு 5 முறை; பின்னர் மதுரை ஷா தியேட்டரில் 7வது முறை.

10) படையப்பா - பெங்களுர் நாகா தியேட்டரில் ரூ. 90 கொடுத்துப் பார்த்த படம். செம ரகளை.

11) பாபா - மும்பயில் வீடியோவில் பார்த்தது.... சிரிக்க வேண்டாம்.... எனக்கு படம் பிடித்து இருந்தது. என்ன ..... ஒரு சாமி இன்னொரு சாமியிடம் போய் சக்தி கொடுனு கேட்டதுதான் பொறுக்கலைங்க...

12) சந்திரமுகி- லண்டன் ஹிமாலயாஸ். 15 பவுண்ட் டிக்கெட். இந்த சமயத்தில் ரஜினி ஃபேன்ஸ்.காம் அறிமுகம்.

13)சிவாஜி- சத்தியமா.. காய்ச்சல் வராத குறைதான். ரிலீஸ் ஆன அன்றே 2 ஷோ பார்த்த படம்.பின்னர் அடுத்த நாள் 3வது ஷோ. இதுவும் லண்டனில்தான்.
மறக்க முடியாத கூட்டம்.

அப்போதுதான் ஒன்று புரிந்தது.... ரஜினியை நேசிக்கும் ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம்; ரஜினியை விமர்சனம் என்ற பெயரில் வெறுக்கும் ஒரு கூட்டம் மறுபக்கம்.....இதுதான் தமிழ் சினிமா. ஆனால் ரஜினியை ஒதுக்கிவிட்டு எதுவும் கிடையாது. பின்னே என்னங்க தசாவதாரத்தை விமரிசனம் செய்ங்கப்பா..... அதுல எதுக்கு சிவாஜிய நோண்டனும்???

4 comments:

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................இத்தனை தடவையா? நீங்க நெசமாவே பெரியாளுதான். கலக்குங்க, குசேலனிலும் தொடரட்டும் உங்கள் கடமை :):):)

rapp said...

உங்க ஞாபக சக்தி பயங்கரமா கலவரப்படுத்துது, அநியாயத்துக்கு ஜாஸ்தி

Vijay said...

rapp.... இதுக்கெல்லாம் போய் உணர்ச்சிவசப்பட்டா எப்டி??? குசேலன் வெறும் 25% தான். மறக்க வேண்டாம்! :)

வழிப்போக்கன் said...

விஜய்...வாழ்த்துக்கள்..

எப்பாவாவது என்ன எழுதறதுன்னு தெரியலனா நம்ம பிளாக் பாத்து கத்துக்கங்க..

:))