Sunday, 24 August 2008

சீறுவதில் தவறில்லை....




உறுமினால்தான் சிங்கம்...
உருண்டால்தான் பூமி...
உதவினால்தான் கடவுள்...
நம்மளை நாமதான் காப்பாத்திக்கனும்....

சாதாரண வார்த்தைகளாக தெரியும் இது; ”பாபா”வில் ரஜினி பேசிய போது உணர்ச்சிகரமாக இருந்தது.

ஒரு மனிதனை இந்தளவுக்கா நோகடிப்பது?

ரஜினியால் சம்பாதித்து பிழைத்த கூட்டம்; இப்போது மீடியா முன்பு வந்து கொக்கரிப்பது சற்றும் முறையாக இல்லை.சரி; குசேலனால் நஷ்டமாகவே இருக்கட்டும்.... ரஜினியிடம் நேரிடையாக சொல்லியிருக்கலாமே!

தனது இமேஜை தக்க வைத்துக் கொள்ளவாவது பிரச்சினையை முடித்திருப்பார். ஆனால் இப்போது நடக்கும் காட்”சீ”களைப் பார்த்தால் ரஜினியின் இமேஜை அடித்து நொறுக்குவதற்க்கான வேலையைப் போல் தெரிகிறது.

ஒரு ரசிகனுக்கு இவ்வாறு தோன்றும் போது “ரஜினி”க்கு இது தோன்றாமல் இருக்குமா?ஆனாலும் இவரின் பொறுமை அசாத்தியமானது. இதே நிலைமையில் வேறு ஒரு நடிகர் இருந்திருந்தால்..... ரசிகர்களை தூண்டிவிட்டு இந்நேரம் பலிகடா ஆக்கியிருப்பார்கள்.

நடிகர் சங்கம் என்று ஒன்று உள்ளதா?


சன் குழுமத்தின் அரசியல் “தாத்தாவின்” அரசியலை விட கேவலமாக இருக்கிறது.இந்த கேவலமான அரசியலில் பல காலமாக இருந்து வரும் மூத்த பத்திரிகைகளூம் பங்கு கொள்வது வேதனை!

இதுவரை தமிழ் மீடியா ரஜினியைப் பற்றி சொன்னவை

1)ரஜினி ம்னநிலை சரியில்லாதவர்
மீண்டு வந்தார்
2)தமிழ் சரியில்லை
மீண்டு வந்தார்

3)பெண்களை ஒடுக்கும் காட்சிகள் அவர் படத்தில் உண்டு
மீண்டு வந்தார்
4)தமிழ்நாட்டில் சம்பாதித்து கர்நாடகாவில் சொத்து சேர்க்கிறார்
(நான் இப்போது இருப்பது லண்டனில்; இங்கே சம்பாதித்த பணத்தில் மதுரையில் சொத்து வாங்க கூடாது என்று இவர்கள் சொன்னால்; நான் என்னத்த செய்ய??)

5)பாபாவிற்க்குப் பின் அவ்வுளவுதான் ரஜினி ஆட்டம் க்ளோஸ்

6)சந்திரமுகி ரஜினி படமே அல்ல

இதை தொடர்ந்து....
இப்போது குசேலன் எபிசோட். வெகு தொலைவில் இல்லை இதன் பின்னனியில் இருப்பவர்களின் முகத்திரை கிழியும் நாள்.

இதுல பிரச்சினை என்னன்னா அவனவன் முதுகுக்கு பின்னால கத்தி சொருவுறானுங்க;நம்மாளு அந்த ஆட்டத்துல ஆர்வமில்லாதவர். அதுக்காக இப்படியே “சும்மா” இருந்தா;எல்லோர் போதைக்கும் நாமதான் ஊறுகாய்.


ஆரம்பத்தில் சொன்னது போல ”உறுமினால்தான் சிங்கம்.... உறும வேண்டாம் ஒரு சீறலாவது வந்தால் எல்லாம் அடங்கும்

ஒரு தடவ ரசிகர்களை “மொத்தமாக” பாருங்க ரஜினி.... அப்புறம் எல்லாமே ஜுஜுபிதான்!

5 comments:

vivek said...

I got to know ur blog via rajinifans.com group.I read all your writeup,it is very good and unique.Keep it up.

Vijay said...

vivek, thanks for ur visit & ur comments :)

கிரி said...

//இதுல பிரச்சினை என்னன்னா அவனவன் முதுகுக்கு பின்னால கத்தி சொருவுறானுங்க;நம்மாளு அந்த ஆட்டத்துல ஆர்வமில்லாதவர். அதுக்காக இப்படியே “சும்மா” இருந்தா;எல்லோர் போதைக்கும் நாமதான் ஊறுகாய்.//

சரியா சொன்னீங்க விஜய்.

இது தான் சாக்குன்னு கண்டவன் எல்லாம் கிண்டல் அடிக்கிறான். அதிக பொறுமை பல பிரச்சனைகளை அவசியமின்றி ஏற்படுத்தும்.

Vijay said...

கிரி, போற போக்கைப் பார்த்தால் இது நமக்குப் பழகிவிடுமோ எனத் தோன்றுகிறது.:))))

Raja said...

4)தமிழ்நாட்டில் சம்பாதித்து கர்நாடகாவில் சொத்து சேர்க்கிறார்
(நான் இப்போது இருப்பது லண்டனில்; இங்கே சம்பாதித்த பணத்தில் மதுரையில் சொத்து வாங்க கூடாது என்று இவர்கள் சொன்னால்; நான் என்னத்த செய்ய??)

-- கலக்கிப் புட்டீங்க.