
குசேலன் / ரஜினியைத் தவிர வேறு எதுவும் தட்டச்ச மாட்டேன் என சபதம் எதுவும் போடவில்லை.
Shoot on Sight. லண்டனில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான நல்ல ஒரு திரைப்படம்.
இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலே தீவிரவாதிகளா?? என்ற கருத்தை மையப்படுத்தி எடுத்துள்ளார்கள். படம் தொடக்கம் முதலே பின்னனியில் ஒரு அமைதி நிலவுகிறது (இருவர் திரைப்படம் போல்)
ஒரு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த்த அப்பாவி போலீஸாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்...... இங்கே தொடங்கும் கதை ஒரு நேர்மையான முஸ்லீம் அதிகாரி தனது சகோதரி மகனை (தற்கொலைப் படையைச் சேர்ந்த்தவன்) சுட்டுக் கொல்வதோடு ; தனது மனசாட்சியின் படி ஒரு வழக்கில் முடிவெடுத்து விட்டு வேலையை ராஜினாமா செய்வதோடு முடிகிறது
நஸ்ருதீன்ஷாவின் நடிப்பு அருமை.உண்மையைச் சொல்ல முடியாமலும், தனது மேல் உயரதிகாரிகள் சந்தேகப்படும் போது மனம் வெம்புவதும், அதன் விளைவாக மனைவியிடம் விரக்தியுடன் அரிச்சல் அடையும் போதும், இங்கிலாந்து ”டீன்” கலாசாரத்தில் மகள் போதை பழக்கத்தில் ஈடுபடும் போது கலங்குவதும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அவரின் மனைவியாக வரும் “greeta scaachi" நடிப்பும் சோடை போகாத ஒன்று.
படம் முழுவதும் மெதுவாகச் சென்றாலும் கடைசி 30 நிமிடங்கள் விறுவிறுப்பாக உள்ளது. குறிப்பாக அந்த தீவிரவாதியை “laila rouass” தொடரும் காட்சியும், அதைத் தொடர்ந்து அவர் கொல்லப்படும் காட்சியும் பார்க்கும் நமக்கும் ஒரு படபடப்பை உண்டாக்குவது நிஜம்.
போலீஸ் அதிகாரியாக வரும் "ralph ineson" ஒரு நிற வெறியரோ எனச் சந்தேகம் வரும் போது அல்ல தான் ஒரு “reality policeman" என நிருபிக்கிறார்.
"om puri" இவரும் நஸ்ருதீன்ஷாவைப் போல ஒரு மிகச் சிறந்த நடிகர். இவர்கள் இருவரும் செய்த பல படங்களைப் பார்த்தால் இவர்களுக்காகவே இந்த கதாபாத்திரங்கள் உருவாக்கப்படுமோ எனத் தோன்றும்.
சிலரின் தவறினால் ஒரு ஒட்டு மொத்த சமூகமே மன உளைச்சலுக்கு ஆளாகும் அவலத்தை மிக அழகாக, தெளிவாக எடுத்தமைக்காக "jag mundhra" & "aron govil"க்கும் ஒரு சபாஷ்.
2 comments:
விஜய் விமர்சனம் நல்லா எழுதி இருக்கீங்க ..நீங்க இதை போல அனைத்து வகையான பதிவுகளையும் எழுதலாம்
நன்றி கிரி.இருக்கும் வேலைப் பளுவிற்க்கு மத்தியில் முடிந்த அளவிற்கு முயற்ச்சிக்கிறேன்.
Post a Comment