Sunday, 14 September 2008

வானம் வசமாகும்

தலைவர் படப் பாடல்கள் தவிர பிறப் படப் பாடல்கள் அனைத்தையும் “ஓட்டி” விடுவது எனது வழக்கம்.ஆனால் சில பாடல்கள் மட்டும் மனதோடு “ஒட்டி” கொண்டு விடும். அதில் ஒன்று இது!

”சின்னக்குயிலின்” குரலும், பரத்வாஜின் இசையோடும் இதை படமாக்கிய விதமும் மிக அருமை. அதிலும் குறிப்பாக “மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்.....” என்று ஆண்குரல் ஒலிக்கும் போது உடம்பு ஒரு முறை மிக லேசாக அதிர்ந்து அடங்கும்.

1) உளிதாங்கும் கற்கள்தானே மண் மீது சிலையாகும். வலி தாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்

2) ஒரு முடிவிருந்தால்; அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும்.

மிக சத்தியம்!

2 comments:

கிரி said...

சந்தேகம் இல்லை சிறந்த பாடல் தான்

இதற்க்கு சித்ராவுக்கு தேசிய விருது கிடைத்தது :-)

Vijay said...

ஆமாம் கிரி, பாடல் வரிகளும் அருமை!