Friday, 14 November 2008

மனிதம் செத்து விட்டது!!!

என்ன சொல்வது; எங்கிருந்து தொடங்குவது என்றும் தெரியவில்லை!...
சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த கலவரம் மிகுந்த அதிர்ச்சியளித்தது.
இவனுங்கதான் நாளைக்கு சட்டத்தை காக்கப் போகிறவர்கள்!!!!
சாலையில் ஒரு நாய் அடிபட்டுக் கிடந்தால் கூட சிறிதேனும் இரக்கம் காட்டும் மனித நேயம் செத்தே போய் விட்டதா??
இது வெறும் மாணவர் பிரச்சினை மட்டும் அல்ல.... கண்டிப்பாக அரசியலும் உண்டு! மின்வெட்டும், விலவாசி உயர்வும் மறக்கடிக்கப் பட்டுவிடும்.
கமிஷனர், கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் என்று வழக்கம் போல “வெளக்கென” சம்பிரதாயம் ஆரம்பித்தாயிற்று. அடிபட்ட மாணவனின் பெற்றோரிடம் “கண்ணீர் பேட்டி”, நடுங்க வைத்த மாணவர் படை”, காவல்துறை அலட்சியம்” என்று கவர் ஸ்டோரி ரெடியாகயிருக்கும்.
3 பேர் மதுரையில் “தினகரன்” அலுவலகத்தில் எரிக்கப் பட்ட போதே “அழகிரி தாண்டவம்” என்று “ரைமிங்”காக எழுதியவர்கள்தானே நாம்!!
முதல்வன் படத்தில் வந்த காட்சி போலத்தான் இருந்தது!
மனசு உண்மையாகவே நடுங்குது.... போற போக்கப் பார்த்தா “நமக்கு நாமே” கொள்ளி வைத்துக் கொள்வோம் போல உள்ளது!.
கூட்டணி பிரச்சினை, மின்வெட்டு.... போன்றவற்றில் இருந்து கவனம் கண்டிப்பாக திசை திருப்ப எடுக்கப்பட்ட ஒரு செயலாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. விசாரித்தால் கலவரத்தில் ஈடுபட்டவர்களில் “கல்லூரியைச் சேராத ரவுடிகள்” இருப்பார்கள்!
மு.க விலகிவிட்டு ஓய்வெடுக்கலாம்!

4 comments:

VIKNESHWARAN said...

அரசியலில் மாற்றம் உண்டானால் இந்த மாதிரி இருக்கும் காட்டு மிராண்டிகளுக்கு மனித நேயம் வந்துவிடுமா?

உதயதேவன் said...

yes..all kundas from outside...many of them not students..

Vijay said...

கண்டிப்பாக ஒரு தொடக்கமாக இருக்கும், விக்னேஸ்வரன்! மேலே உள்ளவன் சிறிதேனும் நியாயமாக இருந்தால்... அடுத்தடுத்த மட்டத்தில் உள்ளவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடும் முன் சிறு யோசனையாவது செய்வார்கள். எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!

Vijay said...

எப்போதும் நடப்பது போலவே, உதயதேவன். வருகைக்கு நன்றி!