Wednesday, 26 November 2008

மும்பை மேரி ஜான்


மும்பை மேரி ஜான் -- இதன் அர்த்தம் “மும்பை என் உயிர்”



1999 மே மாதம் மும்பை தாஜ் பிரசிடெண்ட் ஹோட்டலில் வேலையில் சேர்ந்தேன். முதலில் சிறிது நாட்களுக்கு மொழி புரியாமல் திண்டாடினாலும் வெகு சீக்கிரம் “ஹிந்தி” பழகிவிட்டது.
ஒவ்வொரு முறையும் இந்தியாவில் தீவிரவாதிகளினாலோ அல்லது இயற்கையின் சீற்றத்தினாலோ சேதம் உண்டாகும் போது வேதனை படும் என் மனம்; மும்பையில் அவ்வாறு ஏற்படும் போது சிறிது அதிகமாகவே வலிக்கும். அதுவும் தற்போது தாஜ் /ஓபராய் ஹோட்டலில் நடந்த தீவிரவாதிகளின் வெறியாட்டம் என்னை அதிகமாகவே பாதித்தது.
தற்போது தாக்குதல் நடந்த “Leopold, Taj hotel, CST" ஏரியாவில் நான் திரிந்த நாட்கள் மிக அதிகம். அதுவும் இரவு 12 மணிக்கு “ஷிஃப்ட்” முடிந்த பிறகு தனியாக அந்த ஏரியாவில் சுற்றித் திரிந்த நாட்கள் இன்னமும் நினைவில் உள்ளது. தாஜ் ஹோட்டலின் அருகில் உள்ள “கீராவாலா”வில் காலை 3 மணி வரை நண்பர்களின் “கச்சேரி” நடக்கும். இரவில் தனியாக வீடு திரும்பும் போது ரோட்டில் திரியும் “நபர்கள்”, மெலிதாக கேட்கும் அலையின் ஓசை,படே மியாவின் கபாப், Leopold ன் ”பிட்சர்” பீர்/ Chocolate brownie vanilla ice cream, coloba causeway road என ஒவ்வொரு விஷயமும் இப்போது நினைவில் அதிகமாக வ்ருகிறது.
3 வருடம் மும்பையில்/ தாஜ் பிரசிடெண்ட் ஹோட்டலில் இருந்த சமயத்தை விட லண்டன் வந்த பிறகு இந்தியாவை “மிஸ்” செய்யும் பலரில் நானும் ஒருவன்.

“ தேசம் முன்னேறிச் செல்ல முயலும் ஒவ்வொரு முறையும்; சிலர் பின்னோக்கி இழுத்தால் என்ன செய்வது”.
குறிப்பிட்ட மதம் மீண்டும் விமரிசனத்திற்கு உண்டாகலாம். ஆனால் இதற்கு முழுமையான தீர்வு????

6 comments:

SurveySan said...

//“ தேசம் முன்னேறிச் செல்ல முயலும் ஒவ்வொரு முறையும்; சிலர் பின்னோக்கி இழுத்தால் என்ன செய்வது”. //

முட்டி மோதி மீண்டும் முன்னேறணும்.

வழக்கம்போல், அரசியல் தலைகளெல்லாம், ஸ்டேட்மெண்ட் விட்டாச்சு. அவங்களால இதுக்கு முழு முடிவு எல்லாம் கொண்டு வர முடியாது.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்...

மூளைச் சலவை செய்யப்பட்ட சிலரை, திரும்ப மூளைச் சலவை செஞ்சு மீட்டாதான் உண்டு.
:(

கிரி said...

//தேசம் முன்னேறிச் செல்ல முயலும் ஒவ்வொரு முறையும்; சிலர் பின்னோக்கி இழுத்தால் என்ன செய்வது//

வருத்தமாக உள்ளது விஜய்.

Vijay said...

"முட்டி மோதி மீண்டும் முன்னேறணும்”
ஹ்ம்ம்ம்... இது எல்லோருக்கு தோன்றினால் நல்லது. ஆனால் சில பல அரசியல் தலைவர்களே “கவுக்கறாங்களே” . வருகைக்கு நன்றி சர்வேசன்.

Vijay said...

கிரி, சில நேரம் நாமெல்லாம் வருத்தப்பட மட்டும்தான் லாயக்கு எனத் தோன்றுகிறது :(. நன்றி

Anonymous said...

wher r u in london

Vijay said...

Anony,
am in west london