Friday, 27 February 2009

லண்டன் - ஹைதராபாத்-மதுரை-சென்னை-ஹைதராபாத்-லண்டன்
















போன வருஷமே போயிருக்க வேண்டியது சிலபல காரணங்களினால் ஜனவரி 28 கெளம்பி...இதோ 27 பிப்ரவரில வந்து சேர்ந்தாயிற்று!வருடம் ஒரு முறை மதுரைக்குப் போனாலும்; இந்த முறை 15 வருடங்களுக்குப் பிறகு Hyderabad!....ஏகத்துக்கும் மாறியுள்ளது (மதுரையே ஒவ்வொரு வருடமும் புதுசாகத்தான் உள்ளது!)
இந்த விடுமுறை ஒரு வகையில் புது அனுபவம்தான்!!
சந்தித்த, பார்த்த சில நிகழ்வுகள் மகிழ்ச்சியைத் தந்தாலும், பல நிகழ்வுகள் ஊர் இன்னும் மாறவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தியது.
1)மதுரை மீனாட்சி கோவிலின் முன் போக்குவரத்து குறைத்து, புதிய சாலை அமைத்துள்ளது...
2)சினிப்ரியா தியேட்டர் முன் உள்ள சாலையின் நடுவே போக்குவரத்தை சீராக்க கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்..
3)சென்னை கத்திப்பாரா பாலம்,தி.நகர் லலிதா ஜுவல்லரி அருகே உருவாகியுள்ள பாலம், (சென்று 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது)...
4)மதுரை மற்றும் சென்னையில் பல சாலைகள் “ஒன்-வே” யாக மாறியுள்ளது.
போன்றவை மகிழ்வைத் தந்தாலும்

1)மதுரை, சென்னை, ஹைதரபாத் நகரங்களில் சாலை விதிகளை இன்னும் மக்கள் மதிக்காமல் இருப்பது (சாலை விதிகள் குறித்து இன்னும் முறையான பயிற்ச்சி இல்லை),
2)சென்னை- மதுரை அனந்தபுரி ரயிலில் முன்பதிவு இல்லாமல் வண்டியில் அமர்ந்து கொண்டு “நான் பா.ம.க வின் மாவட்ட தலைவராக்கும்,தைலாபுரம் தோட்டத்திற்கு “அய்யா”வப் பாக்க போறேனாக்கும் என்று உதாருக்கு பணிந்த TTR,
3)ஜன 30ல் அண்ணல் ஆன அண்ணன்- இவர் (அ) இவரது “தம்பி”களின் அட்டகாசம் தாங்க முடியலை!-58 வயதை முன்னிட்டு 58 கோடி ரூபாய் நலத்திட்ட பணிகள் - எங்கிருந்து வந்தது இவ்வுளவு பணம்!????
4)அரசாங்க ஊழியர்களுக்கு(மதுரை ராசாசி மருத்துவமனை முன்பு) நிலுவைத் தொகை வழங்க “உத்திரவு” இட்ட “தலைவர் கலைஞர்” அவர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர்
(திமுக தலைவர் எப்போது இவர்களுக்கும் தலைவர் ஆனார்)!
5) ஒரு பேருந்து நிறுத்தம் தொடங்குவதில் கூட கட்சி விளம்பரங்கள்!
6)ஜெ. வின் பிறந்த நாள் விளம்பரம்.
7) முதல் படத்தில் காண்பது போல பல இடங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் மின்சாரக் கம்பிகள்
போன்ற பல நிகழ்வுகள், சற்றே அச்சத்தை ஏற்படுத்துகின்றன!...
மற்றபடி இந்த முறை 6 வருடங்களுக்குப் பிறகு மதுரையில் தியேட்டருக்குப் போய் “க்யூ”வில் நின்று அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தது பள்ளி நாட்களை நினைவு கொள்ளச் செய்தது. நான் கடவுள்,வெண்ணிலா கபடி குழு, அப்புறம் அந்த தமிழ் taxi படம் என 3 ஆச்சு!. இதில் taxi செம மொக்க!. ஹிந்தியில் அருமையாக வந்த படம் அது!. ஆனாலும் அதில் வரும் “ஆத்திச்சூடி” பாடல் செம குத்து. அதுக்கப்புறம் படம் பார்க்க முடியல...
அதிர்ச்சியளித்த ஒரு செய்தி: ஹைதராபாத்-லண்டன் விமானத்தில் அருகில் அமர்ந்த நபர் சொன்ன ஒரு விஷயம் (மத்திய அரசில் பணிபுரியும் அவர் சொன்னது : அரசாங்கம் என்னதான் அறிவிப்புகள் வெளியிட்டாலும் ,அரசியல்வாதிகள் மக்கள் படிப்பறிவு பெறுவதை விரும்புவதில்லை!!!

3 comments:

கிரி said...

//அரசாங்கம் என்னதான் அறிவிப்புகள் வெளியிட்டாலும் ,அரசியல்வாதிகள் மக்கள் படிப்பறிவு பெறுவதை விரும்புவதில்லை//

படித்தவர்கள் வெட்டி கதைகளை பேசிக்கொண்டு ஒட்டு போடுவதில்லை, குறை சொல்வதோடு இவர்கள் வேலை முடிந்ததாக நினைத்துக்கொண்டு ஒட்டு போடாமல் இருப்பதற்கு நியாயம் கூறிக்கொண்டுள்ளார்கள்

Vijay said...

ஆமோதிக்கிறேன். ஆனாலும் அரசியல்வாதிகள் மக்களை முட்டாளாகவே வத்திருப்பது அதற்கு மக்களும் உடன்படுவது... சற்றே வலிக்கிறது!

எம்.பி.உதயசூரியன் said...

தலைவா..’பறவைப் பார்வை’யில்
எழுதப்பட்ட விதம் அருமை!
‘வீண் பேச்சு’ விரைவிலேயே
‘WIN பேச்சு’ ஆகட்டும்!