திடீரென்று காரணமில்லாமல் இது தோன்றவில்லை. இங்கிலாந்து வந்து 6 வருடங்கள் ஓடிவிட்டது. சரி, மெஜாரிட்டி இந்தியர்கள் போல இந்த ஊர் passport எடுக்கலாமென்று முடிவு செய்து அதையும் செய்தாயிற்று. இப்போது இந்தியாவிற்கு விடுமுறையில் செல்ல வேண்டுமென்றால் visa அவசியம்!
OCI- Overseas Citizenship of Indiaவிற்கு பதிவு செய்து அதை பெற Indian embassy சென்றால் ”காந்தி ஜெயந்தி”யை முன்னிட்டு இன்று விடுமுறை! கடுப்பாகிவிட்டது.
சே! நம்ம ஊரில்தான் இப்படியெல்லாம் நடக்கும் என்று வழக்கமான இந்திய மனப்பான்மையோடு திட்டி விட்டு “இங்கே இப்படியெல்லாம் கிடையாது, நாம்தான் வெட்டியாக இப்படி செய்கிறோம்” என்றெல்லாம் யோசித்துவிட்டு வேலைக்குச் சென்றேன்.
oct-2nd அன்று நாம் அப்படி என்ன செய்து கிழிக்கிறோம்? தொலைக்காட்சியில் ஒரு படம், ஒரு நாள் முன்பே “சரக்கு” ஸ்டாக்”, பிறகு ஒரு தூக்கம். இதற்கு ஏன் ஒரு நாளை விரயம் செய்ய வேண்டும்! என்றெல்லாம் யோசித்தவாறு இருக்கும் போது உடன் பணிபுரியும் நண்பன் ஒருவனும் கிண்டலாக இது பற்றி கூறினான் ( இங்கிலாந்தை சேர்ந்தவர்- வெள்ளையர்)நானும் வழக்கப்படி ஆமாம் என்று தலையை ஆட்டிவிட்டு இவன் சொல்வதும் சரிதானே என்று நினைத்தேன்.
அப்போது அவனிடம் இங்கே இது போன்ற வழக்கம் எதுவும் இருக்கிறதா? என்றேன்
பதில் : We dont waste our time on such things, mate.
பிறகு அவனிடம் உங்க ஊரில் யார் பிரபலம்( இந்தியாவில் காந்தியைப் போல) என்று கேட்டேன். அவன் சிறிது யோசித்து விட்டு ”hmmm... i would say its Churchill" என்றான். அவர் எப்போது பிறந்தார் என்று கேட்டால் பதில் தெரியாது. சரி, வேறு தலைவர்கள் பெயர், பிறந்தநாள் பற்றி ஏதேனும் தெரியுமா
பதில்: தெரியாது.
அப்போது உறைத்தது நமது குடும்பத்தில் இருந்த முன்னோர்கள் பற்றியே ஏதும் தெரியாத நாம் ,நமது தலைவர்கள் குறித்தாவது நினைவு வைத்துள்ளோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்த விடுமுறைதான்! இப்படியாவது வரும் சந்ததியினருக்கு நமது வரலாற்றை தெரிய/ புரிய வைப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
definitely holiday is must for Gandhi jeyanthi. we should remember him always.
Because of him only we got freedom and today we got the respects across the globe.
நீங்கள் சொல்வது மிகவும் சரி, ராம்ஜி :)
காந்தியடிகளினால் மட்டும்தான் நாம் சுதந்திரமடைந்தோம் என்று நான் நினைக்கவில்லை.
Post a Comment