Friday, 18 December 2009

யப்பா.......


சான்ஸே இல்ல...

Wednesday, 9 December 2009

அமிதாப் - தெய்வத்தின் தெய்வம்


ப்பா... நீண்ட நாட்களுக்குப் பிறகு சத்தம், ரத்தம், இல்லாமல் வந்து மனதை மெலிதாய் அதிர்வூட்டிய படம்.
நம்ம கமல் இது மாதிரி ”எவ்வளோவோ செஞ்சுட்டாரு” இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா??
என்ற எண்ணம் தோன்றினாலும்; இது அமிதாப் என்பதாலேயே முக்கியத்துவம் பெறுகிறது.

அமிதாப் - The Angry Young man, Icon of Indian (Hindi) Cinema, The Legend இன்னமும் என்ன சொன்னாலும் தகும்.

படம் ஆரம்பமாகும் பொழுதே ஜெயாபச்சனின் அறிமுகவுரை அற்புதம்.அறிமுகம் அமிதாப்பச்சன் என்று சொல்லி குறும்பாக சிரித்தவிதம் மிகவும் அழகு.

Auroவின் introduction கலக்கலான ஒன்று. அதுவும் பரிசுக் கோப்பையை பிடுங்கிக் கொண்டு செல்லும் ஸ்டைல் / குரங்கு சேஷ்டை சூப்பர்ப்.
அழுவாச்சி படமோ என்று எண்ணும் போதே...இல்லையில்லை படம் முழுவதும் மெலிதான நகைச்சுவை இழையோடும் என்பதை முதல் காட்ச்சியிலேயே உணர்த்தும் பால்கி அவர்களுக்கு ஒரு சபாஷ்.

பால்கியின் “cheeni kum" படத்தில் எவ்வாறு நகைச்சுவைக் காட்ச்சிகள் இருந்ததோ அதைப் போல அன்றாட வாழ்க்கையில் வெகு இயல்பாக நாம் பேசுவது போன்ற வசனம் படத்திற்க்கு பலம்.அதுவும் பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் “bastard" என்று ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதைப் பார்க்கும் போது “நாமெல்லாம் ரொம்ப நல்லவய்ங்களா இருந்திருக்கோம்” என்று பெருமையாகாச் சொல்லிக் கொள்ளலாம்.

Algebraவில் வரும் X, Y பற்றி அமிதாப் விளக்கும் போதும்,Body guards பற்றி விளக்கம் கேட்கும் போதும்,விஷ்ணு என்ற சிறுவனுடன் நடைபெறும் உரையாடலின் போதும் தியேட்டரில் சிரிப்பலை அடங்க சற்று நேரமானது.
படத்தின் மற்றொரு பலம் அபிஷேக்பச்சன் அமிதாப்பின் தந்தையாக நடித்திருப்பது.கண்டிப்பாக இது படம் பற்றிய எதிர்ப்பார்ப்பை அதிகரிகச் செய்தது ஆனால் அமிதாப் மற்றும் வித்யாபாலனின் முன்பு அபிஷேக் எடுபடவில்லை.சோகத்தை வெளிக்காட்டாமல் புன்னகையோடு வலம் வரும் வித்யா பாலன் மற்றும் அவரது தாயார் கேரக்டர் (பெயர் நினைவில்லை)சரியானத் தேர்வு.
வித்யாபாலனின் தாயாக நடித்திருப்பவரின் நடிப்பும் அருமை. Hey Bum !!! ;))

Cheeni Kumல் வரும் சிறுமியின் பாத்திரம் படத்தின் மிகப் பெரிய பலம்.க்ளைமேக்ஸில் அவள் பேசும் வசனத்தை Tabuவின் வசனத்தோடு பால்கி இணைத்திருப்பார்.அதைப் போல இப்படத்திலும் கடைசியில் ஒரு சிறுமி பேசும் வசனம் அருமை.
அபிஷேக் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பதைக் காட்ட வரும் காட்சிகள் ஒட்டவில்லை.
ஒரு பரபரப்போ, திடுக்கிடும் திருப்பங்களோ இல்லாமல், மிகவும் தெளிவான திரைக்கதையோடு, படம் இப்படித்தான் முடியும் என்பதை முன்பே உணர முடிந்தாலும் ”ப்பா” மனதை ஆக்கிரமித்ததன் மிகப் பெரிய காரணம் அமிதாப்தான்.


இசை - இளையராஜா... பால்கி ஒரு இண்டர்வியூவில் சொல்லியிருந்தார் Cheeni Kum படத்திற்காக ராஜாவை அணுகி உங்களது பழைய பாடல் மெட்டுக்களிலிருந்து எடுத்துக் கொடுங்கள் என்றாராம். அதற்கு ராஜா : புது மெட்டுக்கள் தருகிறேன் என்று கூறியதற்கு பால்கி கூறினாராம் ”உங்களது 80ல் வந்த இசையைக் கேட்டறியாத வடமாநிலத்தவர்கள் அதைக் கேட்பதற்க்கான ஒரு வாய்ப்பு இது.

Theme Music ஒன்று மட்டுமே போதும் “ராஜா ராஜா”தான் என்பதை நிரூபிக்க.

பால்கி aka பாலகிருஷ்ணன் - 2வது படத்திலும் உங்கள் மீதான மரியாதையும்/ எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. வாழ்த்துக்கள்!
அமிதாப் Shahensha படத்தில் வில்லனிடம் பேசும் வசனம்
"RISHTEY MEIN THO HUM TUMHARE BAAP LAGTE HAIN, NAAM HAI SHAHENSHAH (உறவு முறையில் பார்த்தால் நான் உனக்கு அப்பன் மாதிரி, என் பெயர் Shahensha)

இதை அவர் தற்போதைய இளைய/ வளரும் நடிகர்களிடம் சொல்லலாம்!!

அது என்ன “தெய்வத்தின் தெய்வம்” ??? எனக்கெல்லாம் சாமின்னா “ரஜினி”தான் ;) ஆனால் ரஜினி சாமியே சாமி லெவலுக்கு கொண்டாடுவது அமிதாப்பைத்தான்.. அப்ப தெய்வத்தின் தெய்வம் ஓகேதானே !! ;))))