Wednesday, 3 March 2010

புரோக்கர் எதுக்கு???

கடவுள் இல்லை என்பவருக்கும், இந்து மதத்தினை இழிவாக பேசி வருபவர்களுக்கும் இதோ அடுத்த ஜாலியோ ஜிம்கானாதான்!

”ரிப்பீட்டேய்” என்றபடியே அடுத்த “டகால்டி”!. மக்களின் மீதுதான் குற்றம் சொல்ல வேண்டும். அது நீண்ட சடையோ/ வழுக்கைத் தலையோ நம்பி விடுகிறார்கள்.
திருடனை வீட்டிற்குள் அனுமதித்த பின்பு திருடி விட்டான் என்று புலம்புவர்களைப் பார்த்து எனக்கு இம்மியளவும் பரிதாபம் ஏற்படவில்லை. மாறாக “ பார்ட்டி” கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமென்றுதான் தோன்றியது. குமுதம் என்ன சொல்லப் போகிறதோ.. ஏனென்றால் இவருக்கு “ஓப்பனிங்” தந்ததே குமுதம்தான்(கதவைத் திற.. காற்று வரட்டும்)
ஆனால் சாமி நீங்க கதவை/ ஜன்னலை மூடியிருக்க வேண்டும் :))))

கடவுளை நம்புங்கள் அல்லது நம்பாதிருங்கள் ஆனால் கடவுளுக்கும் உனக்கும் இடையே நான் “மீடியேட்டர்” என்பவனை/ளை நம்பாதீர்கள்.
சிலரைப் பார்த்தவுடனேயே ஒரு வகையான அபிப்ராயம் ஏற்படும்.... எனது சொந்த அனுபவத்தில் இது வரை மீடியா வெளிச்சத்தில் இருக்கும் அல்லது இருந்த எந்த ஒரு ஆன்மிகவாதியின்(???) மீதும் நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது.
இதனக் கூறுவதால் நான் நாத்திகவாதி என்று அர்த்தமாகிவிடாது. தினமும் குளித்து சிறிதளவு திருநீர் பூசி “ கடவுளே இன்றைய நாள் நல்ல படியாக போக வேண்டும்” என்றபடி வேலைக்குச் செல்பவர்களில் நானும் ஒருவன். அவ்வப்போது கோவிலும் / தேங்காயும் உண்டு. இது எல்லாமே 1 to1தான்!

கலிகாலம் இது.... கல்கிதான் காப்பாற்ற வேண்டும்!.... அடடா அவரும் மாட்டிக்கிட்டாரோ!!

1 comments:

R.Gopi said...

சரியா தான் சொல்லி இருக்கீங்க பாஸ்...

கடவுளுடன் நாம் நேரடியாகவே உரையாடி நம் பிரச்சனைகளை தீர்க்க சொல்லலாம்...

இடையே தரகர்கள் தேவையில்லை என்பதே என் கருத்தும்...

வாழ்த்துக்கள்....

நேரமிருப்பின் என் வலைகளுக்கும் வருகை தாருங்கள்...

வெற்றியின் விழுதுகள் – (பகுதி-7) http://edakumadaku.blogspot.com/2010/04/7.html
”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு http://jokkiri.blogspot.com/2010/03/blog-post_31.html