
பளபளக்கும் கடைகளுக்குள் உழலும் மனிதர்களின் இருட்டு வாழ்க்கையை முகத்தில் அடித்தாற் போல் சொல்லும் ஒரு படம்.
வசந்தபாலனின் ஒரு நேர்மையான முயற்சி!
இயலாமை, இல்லாமை மற்றும் வறுமையில் வாழும் மக்களின் கதைக் களத்தை தேர்ந்தெடுத்தவரைப் பாராட்டியே தீரவேண்டும்.
வெயிலில் தோல்வியை மட்டுமே சந்திக்கும் மனிதனை கதாநாயகனாகக் காட்டியவர்.... இப்படத்திலும் அடித்தட்டு மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் அவலத்தையும் உரித்துக் காட்டியுள்ளார்.
அவ்வப்போது பத்திரிகைகளில் மட்டுமே படித்து பின்னர் மறந்து போகும் ஒரு விஷயத்தை திரையில் பார்க்கும் போது மனம் பதறுகிறது.
இனி துணி வாங்க கடைக்குப் போகும் போதெல்லாம் இப்படத்தின் காட்சிகள் நெஞ்சை உறுத்தும்.
தந்தையை இழந்த காரணத்தினால் படிப்பை விட்டு சென்னைக்கும் வரும் மகேஷ் மற்றும் அவரது நண்பரும் கனவுகளோடு சென்னைக்கு வருவதும்.. அங்கே மனிதனை நாயாக கூட மதிக்காமல் பன்றிக் கூட்டம் போல நடத்தும் அவலம்தான் படத்தின் கரு.
கதாநாயகியாக வரும் அஞ்சலிக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். அருமையானத் தேர்வு. அவரின் தந்தையாக வரும் விக்கிரமாதித்யன் மகளை அநாதையாக மருத்துவமனையில் விட்டுச் செல்லும் போது நமது நாட்டில் இது போன்ற அவலங்களும் நிகழ்கின்றன என்ற கசப்பான உண்மை சுடுகின்றது.
குள்ளனாக வருபவரும், அவரது மனைவியாக வரும் பெண்ணும் ... அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையும்... காட்சியமைப்பும், வசனமும்.. பிரமிக்க வைக்கின்றது.
சரி... படத்தில் வரும் ஒவ்வொரு பாடல் காட்சிக்குப் பின்னர் இவர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று பார்த்தால் மேலும் மேலும் அடி மேல் அடி விழுகிறது.
திரையரங்கை விட்டு வெளி வரும் போது இது ஒரு படம்தானே என்ற எண்ணம் ஏற்படவில்லை. காரணம் இது போன்ற செய்திகளை பற்றி கேட்டோ / படித்தோ உள்ளோம்.
ஆனால் அதனை ஒரு காட்சியாக பார்க்கும் போது மனதை ரணமாக்குகிறது.
“அண்ணாச்சி” களின் ராஜ்ஜியத்தை உரித்துக் காட்டுகின்ற ஒரு நிஜக் குரலாகவே இப்படம் தோன்றுகிறது.
அதுவும் படம் முடிவடையும் போது கேமரா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர போர்டின் மேல் சென்று முடிகிறது
0 comments:
Post a Comment