Sunday, 11 July 2010

மதராசபட்டினம்...


மதராசபட்டினம் - தமிழில் வந்து கொண்டிருக்கும் "சில நல்ல" படங்களின் வரிசையில் சேர்ந்துள்ள புதிய படம்.

ஒரளவிற்கு ஹிந்தி, ஆங்கிலம் (Titanic தான்) படங்கள் பார்ப்பதால் படத்தில் சில காட்சிகள் அப்படங்ளை நினைவூட்டினாலும் தமிழில் நல்லதொரு படமாய் வந்துள்ளது. படத்தில் "Lagaan", Titanic படங்களின் பாதிப்பு இருப்பது அதிகம் தெரியாமல் இருக்க ஒரே காரணம்..... தமிழில் சில படங்கள் மட்டுமே இது போல வருகின்றது அதனை வரவேற்போம்.

படம் Amy என்ற பாட்டியின் நினைவுகளோடு தொடங்குகிறது.

பாட்டி... ஆர்யாவின் ஃபோட்டோவைப் பார்க்கும் போது "போச்சுடா.... அடுத்த flash back" என்ற நினைப்பை பொய்யாக்குகிறது சற்றே விரிவாக , வித்தியாசமாக படமாக்கப்பட்டுள்ள படம்.

ஆர்யா....நன்றாக செய்துள்ளார். அவரின் அறிமுக காட்சியாகட்டும்,
போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியே வரும் போது வெளிப்படுத்தும் நக்கல் கலந்த ஆத்திரமாகட்டும்,, ஆங்கிலம் கற்றுக்கொள்ள அவரின் முயற்சியும், குஸ்தி போரிடும் போதும்.... நான் கடவுள் படத்தைக் காட்டிலும் தேர்ந்த நடிப்பு. வாழ்த்துக்கள் ஆர்யா

Amy Jackson : ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்... சுருக்கமாகச் சொன்னால் ... நம்ம ஊர் ஹீரோயின்கள் பலரை விட பாந்தமான அழகு கூடவே அருமையான நடிப்பும். Miss teen world 2009!
எங்க ஊர் என்பதில் (UK) சற்றே பெருமைதான்


மறந்துட்டியா என அவர் ஆர்யாவிடம் கேட்கும் காட்சி அவ்வுளவு சீக்கிரம் மறக்காது, மனதினுள் காதலை வைத்துக் கொண்டு மருகும் காட்சியிலாகட்டும்.... கலக்கிட்டீங்க Amy!! கூடிய சீக்கிரம் தெள்ளத்தெளிவாக தமிழில் வெளுத்துக் கட்டுவார் போலத் தெரிகிறது

யாருங்க அந்த வெள்ளைக்கார போலீஸ்???? சரியான ``வில்லன் மூஞ்சி`` !!
கைதிகளை ஓடவிட்டு அவர்களை கொல்லும் விதம் இன்னமும் நடுக்கத்தை தருகிறது!.

வி.எம்.சி ஹனீபா. மனிதர் பின்னி பிடலெடுத்துள்ளார். ஆனால் இனி அவரின் நடிப்பை இனி வரும் படங்களில் காண இயலாது என்ற நினைக்கும் போது வருத்தமாகத்தான் உள்ளது.

நாசர், பாலாசிங், பாஸ்கர் ஆகியோரின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் அருமை.

இசை : ஜீ.வி.பிரகாஷ். வாம்மா துரையம்மா, மேகமே பாடல்கள் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பின்னணி இசையும் அருமை !

படத்தில் சில காட்சிகள் கிராபிக்ஸ் என்றாலும்... அந்தக் காலத்து சென்னையை காணும் போது.... மிக தத்ரூபமாகத் தோன்றுகிறது. ஆர்ட் டைரக்டரின் உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. விருது கிடைக்கலாம்!

படத்தின் அளவைச் சிறிது குறைத்திருக்கலாம். இடைவேளை இல்லாத படமோ என்று நினைக்கும் அளவிற்கு முதல் பாதி(யும்) நீளம். படத்தின் இயக்குனர் விஜய் Titanic மற்றும் Lagaan படத்தின் பாதிப்பை தமிழில் தந்துள்ளார்.ஆர்யா- போலீஸ் குஸ்தி பந்தயம்,படத்தின் கடைசி காட்சி படகில் என சில காட்சிகள்.
துரையம்மாள் ட்ரஸ்ட் காட்சிகள் வலுவில் திணிக்கப்பட்டது போல தெரிகிறது. எதிர்ப்பார்த்த க்ளைமேக்ஸ்.

தமிழில் நல்லதொரு முயற்சி...

சிறிது கத்திரி போட்டால் படத்தில் இன்னமும் விறுவிறுப்பு கூடும்..... நம்ம ஊர் தியேட்டர் ஆப்பரேட்டர்கள் அதில் வல்லவர்கள்!