
பெற்றோருக்குப் பிறகு அறிமுமாகிய மற்ற உறவுகளான மாமா, சித்தப்பா, சித்தி, அத்தை வரிசையில் ரஜினியும் ஒருவர். (4/ 5 வயது இருக்கலாம்)
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக என்னுள் ஒருவனாய் (பாரதியை, கண்ணனை ஒருமையில் விளிப்பது போன்றுதான் இதுவும்!!), என்னை மகிழ்வித்து, ஊக்கப்படுத்தி, திரையில் ஆவேசப்படும் போது எனது நரம்பினை முறுக்கேற்றி, சிரிக்கும் பொழுது என்னையும் சிரிக்க வைத்து.... 8-10 வயதிலேயே "ரஜினி பைத்தியம்" என்ற பட்டத்தை எனக்கு கிடைக்கச் செய்த போக்கிரி ராஜா.
April 29ல் இருந்து மனதில் அமைதியில்லை...... அப்பா/ அம்மாவிற்கு உடல் நலம் குன்றினால் ஒரு விதமான ஆத்திரமும், இயலாமையும், பயமும் ரவுண்டு கட்டி அடிக்கும். அதே உணர்வுதான் இந்த நாட்களில்.
என்னதான் வெளியே நார்மலாகத் தெரிந்தாலும்....உள்ளுக்குள் ஒரு படபடப்பு, சொல்ல முடியாத ஒரு நடுக்கம், இதனால் வரும் எரிச்சல்; இந்தக் கலவைகளின் வடிவத்தைக் காண வேண்டும் அல்லது உணர வேண்டுமானால் தற்போது ரஜினி ரசிகர்களைப் பார்த்தால் போதும்.
தலைவர் உடல் நலம் பற்றி ஒவ்வொரு நாளும் சிந்திக்கும் ரசிகர்களைப் பார்த்து அனுதாபப்படும் அறிவுஜீவிகளைப் பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது.
எதற்காக இவ்வாறு இருக்கிறார்கள்? தமிழனின் தலைவிதியா இது? ரஜினி அப்படி என்ன செய்து விட்டார்? இன்னமும் வக்கனையான கேள்விகள்.
தமிழ்நாட்டு மக்களின் பணத்தை சுரண்டி ஏமாற்றியவராம் ( என்ன..... இதுவரை ஒரு ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி சம்பாதித்திருப்பாரா!!??)
1) இதுவரையில் தனக்கிருக்கும் ரசிகர்களை தனது சுயலாபத்திற்காக உபயோகப்படுத்தியதில்லை. பாபா பட ரிலீஸான சமயம் நடந்த சம்பவங்கள் ஒன்றே போதும். இன்றைய தேதிக்கு வீட்டின் முன் வண்டி நிறுத்தியிருந்தாலே .....அறிக்கை விட்டு அரசியலுக்கு வந்து அலப்பறை செய்து, கூட்டத்தைப் பார்த்து மகிழ்கிறார்கள். தேடி வந்த பதவியைத் துச்சமாக தள்ளிவிட்டவர்.
1996ல் ஜெ ஆட்சியில் நடத்தப்பட்ட தனி மனித தாக்குதலாகட்டும், காவிரி நீர் விவகாரமாகட்டும், ஓகனேக்கல்/ குசேலன் பிரச்சினையாகட்டும்.... ரசிகர்களைத் தூண்டிவிடாமல் இருந்தாரே....
2) 30 வருடங்களாக நான் கொடுத்த காசிற்கு(அதற்கும் மேலாக) என்னை திரையரங்குகளில் மகிழ்வித்த/ மகிழ்வித்து வரும் ஒரு நல்ல "entertainer"கு அதற்கும் மேலாக நான் மதிக்கும், என்னுள் "inspiration"ஆக இருக்கும் மனிதருக்கு தற்பொழுது உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கும் பொழுது சற்றே வாட்டி வதைக்கிறது.
இதையும் மீறி இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல்/ விரும்பாமல் இருக்கும் அன்பர்கள்......தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளவும். இது எங்க ஏரியா.......
பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் இன்றைய தேதிக்கு நல்ல வேலையில், குடும்பத்துடன் சந்தோஷமாகத்தான் உள்ளனர். ஆம் ரஜினி என்றாலே ஒரு பரபரப்பு, படபடப்பு, சந்தோஷக் கூச்சல்/ கலாட்டா, விசில்... இதெல்லாம் உண்டு. அதற்காக ஏதோ நாங்கள் தினமும் காலை முதல் மாலை வரை இதைத்தான் செய்கிறோமா?
இது போன்ற ஒரு கூட்டுப் பிரார்த்தனையை தமிழகம் ஏன் இந்தியாவே மீண்டும் எப்போது கானும்? இதில் ரஜினி ரசிகர்கள் இல்லாதவர்களும் அடங்குவார்கள்!!
இதோ இன்று சிங்கப்பூருக்குச் செல்கிறார்...... கூடிய விரைவில் பூரண உடல்நலம் பெற்று விரைந்து திரும்பி வா தலைவா!
Have a pleasant & safe flight .
2 comments:
unmai thaan nanbare, rajini nadigan, sontha uravugalaivida oru nerungiya bandham thaan. Neengal sonna antha janmangal maname illathavargal. ithe thalippil veru oru mundam eluthiyirundhahathrkku pathil kooda sollamal yenendraal vanmurai vaarththagalil vaai varai vanthathu; enave ondrum sollamal ... athu sari ungal intha pathivai padththa intha ganathil naan kadavulai prrathanai seythen. athu pol ovovruvarum seythaale kootu prarththanai ingeyum matrondru nadai perum.
Iraivaa engal anbu thalavanukku sakthi kodu
I knew you were and continuing to be a diehard fan of Rajini but this article proved your feelings towards him, well expressed. Bravo!
Post a Comment