தலைவரின் படங்கள் பெரும்பாலுமே zero to hero conceptல் இருப்பவைதான்.
அதிலும் அவர் கதாபாத்திரம் செய்யும் அந்த மேஜிக்கைப் பார்ப்பவர்கள் இதெல்லாம் (ரஜினி)சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கிண்டலடிப்பார்கள்.
ஆனால் தலைவர் ரசிகர்களுக்கு மட்டுமே புரிந்த, ரசிக்கும்படியான ஒரு விஷயம் அது!
கண்டக்டர் to சூப்பர்ஸ்டார்..... இதுவும் சினிமாவில் மட்டுமே சாத்தியம் (!)
ராமச்சந்திராவில் இருந்து சிங்கப்பூர் சென்ற போதே மனதில் இது தோன்றியது..... சரி தலைவர் திரும்பி வரட்டும் அப்பொழுது இதனைப் பதிவு செய்தால் இன்னும் ரகளையாக இருக்கும் என்று காத்திருந்தேன்!
ந்தோ..... வந்துட்டாருல்ல...... வந்துட்டாருல்ல......
சிங்கப்பூர் சென்ற அந்த இரவு , அந்த சோர்ந்த குரல்..... யப்பா..... இப்போதும் நடுக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. செல்ஃபோனில் டவுன்லோட் செய்து கேட்ட பின் காரில் உட்கார்ந்து விக்கி விக்கி அழுதது, ஆறுதல் சொல்வதா இல்லை இப்படி ஒரு "கே"யிடம் மாட்டிக் கொண்டோமோ என திகைத்துப் போய் மனைவி பார்த்தது, மனதைத் தேற்றியபடி ஒரு வழியாக வீடு வந்த பிறகு youtubeல் தலைவரின் வீடியோக்களைத் தேடி தேடிப் பார்த்து மீண்டும் அந்த "சீக்ரம் வந்துடறேன் ராஜாக்களா" என்ற குரலை தலைவனின் வாக்காக எடுத்துக் கொண்டு காத்திருந்தேன்(தோம்)
சிவாஜியில் மரணத்தை தொட்டுவிட்டு "new boss"ஆக அவதரித்து வந்ததைப் போலவே உள்ளது !! அது ரீலில் பார்த்தது
ரியலில் : அனைத்து வதந்திகளையும் மறக்கடிக்கச் செய்துவிட்டு மீண்டும் வந்துள்ளார்!
இது கிண்டலுக்காக சொல்லப்பட்டது.... ஆனால் உண்மையும் இதுதான் There is nothing like "Rajini-can't"
ஆண்டவன் சொன்னதை "அருணாச்சலம்" கேட்ட காலம் போய்... இப்போது
ரசிகர்கள் வேண்டுதல்களை "அந்த அருணாச்சலம்" நிறைவேற்றும் காலம் !
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இப்போது
ரசிகர்கள் வேண்டுதல்களை "அந்த அருணாச்சலம்" நிறைவேற்றும் காலம் !
-இந்த வார்த்தைகள் நிஜமாகப் போகின்றன.
supero super
supero super, Irukku inime ella badu nayeengalukkum appu
Post a Comment